அப்போ, நிர்வாணமாவா வரமுடியும்? இப்போ…கோவில் சிலை கூட செக்சி…வொய் திஸ் டென்ஷன்?

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஒரு சீன் வச்சிட்டாங்க. நடிகை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் டிவி ரியாலிட்டி ஷோவினை ஆதாரமா வைத்து செமையாக கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு சீன் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் வைத்தார்கள்.அப்ப ஆரம்பிச்ச இந்த பஞ்சாயத்து இப்பவும் ஓடிக்கிட்டு இருக்கு.

அப்பவே கொதித்து எழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அதில் நடித்திருந்த ஜி.வி. பிரகாஷ் குமார் , ஆர்.ஜே. பாலாஜி யை டிவிட்டரில் வாங்கு வாங்கு என்று வாங்கினார். அத்தோடு இயக்குனர் ராஜேஷை யும் விட்டுவைக்கவில்லை.

பாலாஜி பதில் சொல்லவில்லை. ஜி.வி. பிரகாஷ் மட்டும் பதில் சொன்னார். ஏன் பாலாஜி பதில் சொல்லவில்லை? என்று இவர் தொடர்ந்து ட்வீட் பண்ணவும், ரசிகர்கள் லட்சுமியை கமெண்ட் பண்ணி திட்ட ஆரம்பித்தனர்.

இதனால் கடுப்பான லட்சுமி, சமூகவலைத்தளத்தை விட்டே போகிறேன் என்று நவம்பர் 23 ட்வீட் செய்தார். அதன்பின், சொன்ன சொல் மாறி, 25 நாட்கள் கழித்து டிசம்பர் 19 ம் தேதி முதல் ட்வீட்டரை பயன்படுத்த துவங்கி விட்டார்.

இதற்கு நடுவில் குஷ்பு நடத்தும் பஞ்சாயத்து ஷோவில்,குஷ்பு கோபப்பட்டு ஒருத்தரின் சட்டையை பிடிக்க…ஸ்ரீப்ரியா களம் இறங்கினார். பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்துடறாங்க என்று ஒட்டு மொத்தமாக குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் ரியாலிட்டி ஷோக்களை பற்றி விமர்சிக்க, சும்மா இருப்பாரா…நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் ?

‘புடவை கட்டாம நிர்வாணமா வா வர முடியும் என்று ஆரம்பித்து இன்னும் தொடர்ந்து லட்சுமி தன் கருத்துக்களை சண்டைக்கோழியாய் டிவிட்டரில் நிற்க, இப்போ லேட்டஸ்ட் …லட்சுமி நடத்தும் ரியாலிட்டி ஷோவை புகழ்ந்து தள்ளி உள்ள ட்வீட்டுகளை பாலாஜிக்கு, ஸ்ரீப்ரியாவுக்கு பதிவிட்டு,’ என் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை பொறுத்து தாக்கம் இருக்கிறது . கெட்ட புத்தியுடன் பார்த்தால் கோவில் சிலைகள் கூட செக்சியாக தான் தெரியும்” என்று சீண்டியுள்ளார்.

இதுக்கு யார் பதில் சொல்லுறாங்களோ என்னவோ…ஸ்ரீப்ரியா சொல்லுவார்…வெய்ட் பண்ணுவோம்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY