தமிழனா கொக்கா…! உலகிற்கே சவால் விட்ட ஆச்சரியங்கள் : பாகம் : 3

தமிழன்என்னகண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.!

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு..!

தொல்காப்பியமும்‪-திருக்குறளும்:

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங்கூறிட்டு அணுவின் அணுவினை அணுக வல்லார்க்கு அணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலடங்கா கோடி அண்டங்கள்..பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.

ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து… என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள்,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல்_அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே!

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.

தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்.

அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குஜராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.

பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.

அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடல் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் ஜனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபணமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையனைத்தும் அனைவரும்  படித்து ரசித்தவையே .

நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.

இனி யாராவது தமிழனை தப்பா பேசுவாங்களா நண்பர்களே..? தமிழன்டா..!

Related Topics :Don’t miss