நாஞ்சில் சம்பத் தற்கொலை செய்து கொள்ளப்போகிறார்…? படிங்க ஜாலியா

டிடிவி தினகரனை விட்டு ஓ.பி.எஸ்  இடம் தான் செல்லும் நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் டிடிவி தினகரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில், தினகரன் நன்றாக இருந்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும். தினகரனிடம் தான் நீதி உள்ளது என அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஒரு ஆளுமை நிறைந்த தலைவராக தினகரன் மட்டுமே இருப்பார்.

இதையடுத்து சூழலுக்கு தகுந்தாற் போல் மாறுகிறீர்களே என நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், என்னை இதற்காக யாராவது
காறி துப்பினால் கூட அதை பொருட்படுத்தாமல் துடைத்து கொள்வேன்.

தினகரனை விட்டு ஓ.பி.எஸ்இ டம் சென்று நிற்கும் நிலை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன், என்னை நானே மாய்த்துக்கொள்வேன் என்று உணர்ச்சி கொந்தளிப்பாக கூறினார்.

Related Topics; Don’t miss