ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற கொடூர தாய்…!!

ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற கொடூர தாய்…!!

உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபத்தின் பட்லா நகரை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை ஆசையில் இருந்த இவருக்கு பிறந்தது பெண் என்பதால் ஏமாற்றம் ஏற்பட்டது.

இதனால் அந்த குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டில் குடும்பத்தார் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் முகத்தில் தலையனையை வைத்து அமுக்கி கொலை செய்தார்.

அதன்பிறகும் ஆத்திரம் தீராத அந்த பெண் அந்த குழந்தையை வாஷிங்மெனில் போட்டு மறைத்த வைத்துள்ளார். அதன்பிறகு குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாக நாடகமாடி உள்ளார்.

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது, குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார்.

ஆண் குழந்தை ஆசையில் இருந்தபோது பிறந்தது பெண் குழந்தை என்பதால் தன் மேலேயே அவருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அந்த கோபத்தை குழந்தையை கொன்று தீர்த்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

Related Topics: Don’t Miss