ரகசியத்தை வெளியிடாத அமைச்சர்கள் கூட்டம்! அதிமுகவில் இனி சசிக்கு இடம் இல்லையா?

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.

ஒபிஎஸ் சொன்ன கருத்து வரவேற்கதக்கது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது அம்மாவின் ஆசை,

அதுபோல நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுவோம்.

மக்களவை துணை சபாநாயகர் சொன்னது போல ஒன்றுமையாக செயல்பட என்ன செய்யவேண்டியதை பற்றி பேசினோம். எல்லா அமைச்சர்களும் ஒற்றுமையாக உள்ளனர்.

வேறு எந்த பொருளைப்பற்றியும் விவாதிக்கப்பட வில்லை.

இரட்டை இலையை மீட்பதற்கு பத்திர பிரமணம் பெற்றதுக்குறித்து பேசப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட வேண்டியதை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒபிஎஸ் கருத்து வரவேற்கப்பட வேண்டிய கருத்துதான். கழகத்தை வலிமைப்படுத்தி. ஒன்றுமையாக இருந்து அதன் அடிப்படையில் வலிமைமிகு இயக்கமாக கொண்டு செல்லவேண்டும். 123 எல்லா அமைச்சர்களும் ஒன்றுமையாக இருக்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள், உடுமலை ராதா கிருஷ்ணன் வீட்டில் என்ன நடந்த்து என்று கேட்டதுக்கு சரியான பதில் இல்லை. அதுபோல. துணைப் பொதுச் செயலாளா பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு துணைப் பொதுச் செயலாளர் சென்னையில் இல்லை. இல்லாதவரைப்பற்றி பேசக்கூடாது.

அவர் சொல்லாமல் அவசர கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன,

ரகசிய கூட்டமே கிடையாது. நீங்க என்ன சிபிஐயா, போலீஸ் ஆபிசரா என்று நிருபர்களிடம் தகராறு செய்ய துவங்கினர்.

அம்மாவின் இயக்கம் 1 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம் தொண்டர்கள் முடிவுதான் எங்க முடிவும்..

தேர்தல் ஆணையத்தின் பிரச்னை தீர புரட்சி தலைவரின் சின்னம், மீண்டும் கழகத்திற்கு வரவேண்டும் ஒட்டு மொத்த கழக தொண்டர்களின் ஆசை அதனை நடைமுறை படுத்துவோம்..

நாளை ஒபிஎஸ் சந்திக்க வாய்ப்பு உள்ளதா, என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஜெயல்லிதா இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு இது குறித்து ஒபிஎஸ் உங்ககிட்ட, அவர் சொன்னாரா என  அமைச்சர்கள் நிருபர்களிடம் பாய்ந்தனர்.

கட்சி நல்லா இருக்கணும், ஆட்சி நல்லா இருக்கணும் என்பதற்காக உயிரை கொடுத்துள்ளார். இரட்டை இலையை மீட்போம். சட்டமன்ற உறுப்பினர் ஒரே குடும்பம், ஒற்றுமையா சேர்ந்து இரட்டை இலையை மீட்போம். நாங்கள் சகோதர்ர்கள் நாங்கள் ஒன்றுபடுவோம்.

துணைப் பொதுச் செயலாளர் சென்னை வந்ததும் இதுகுறித்து அவரிடம் விவாதிப்போம் என்றனர்.

நாளை எம்எல்ஏக்கள் என் சென்னை வருகின்றனர் என்ற கேள்விக்கு அவர்கள் ஐஎன்எஸ் கப்பலை பார்க்க வருகின்றனர் என்றனர். சசி பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார என்ற கேள்விக்கு அது சுத்த பொய் என்று பதில் கூறினர்.

கூட்டத்தில் ஏதோ ரகசிய முடிவு எடுத்துள்ளனர் அதனை வெளியே சொல்லாமல் பூசி மொழுகி பேட்டி அளித்தனர்.