ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா..! பெண்கள் படிக்காதீங்க..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

🌼பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்..

🌼ஒரு நாள்,  இரு நாள் அல்ல*.

🌼தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

🌼இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

🌼அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.

🌼இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.

🌼அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.

🌼சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்.

🌼 குடும்பத்தில் உள்ள அனைவருக்குக்காக அவனே உழைக்க வேண்டும்.

🌼இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

🌼இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.

🌼ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

🌼அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன் .

🌼ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன் .

🌼அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான் .

🌼அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.

🌼கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.

🌼சிரிப்பு வந்தாலும் அதை  கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

🌼தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான்.

🌼மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்.

🌼ஓ………இந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.

🌼எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல.

🌼அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

🌼அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரட்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது .

🌼ஒரு ஆணின்  கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்.

🌼ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.

🌼இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

🌼தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

🌼அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..!

 Related Topics :Don’t miss

Did you find apk for android? You can find new Free Android Games and apps.