ஜெ.வுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அஞ்சலி..!

ஜெயலலிதாவுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்ட நட்பு உண்டு, ஜெயலலிதாவை, கிளாரி கிளிண்டன் சென்னைக்கு வந்து சந்தித்து உள்ளார்.

அதுபோல ஹாலிவுட் சூப்பா் ஸ்டார் அா்னால்டு கூட சென்னைக்கு வந்தபோது ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார்.

அவரது இறுதி சடங்கில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், சினிமா நட்சத்திரங்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

வாஷிங்டன்னில் உள்ள கேபிடல் ஹில் பகுதியில் நடந்த இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சிகாகோவை மையமாக கொண்டு இயங்கும் தமிழ் இளைஞர்கள் உலக கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. உலக அளவில் தனது திறமையால் தடம் பதித்தவா் ஜெயலலிதா.

Related Topics : Don’t miss

LEAVE A REPLY