நெட் கனெக்ஷன் இல்லாமலும் இன்ஸ்டாகிராம் இயங்கும்.!

பேஸ்புக் டெவலப்பிங் கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு செயலிக்கான ஆஃப்லைன் வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வைத்து ஆஃப்லைனில் பிரவுசிங் மற்றும் ஸ்கிராலிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும், இண்டர்நெட் இணைப்பு இல்லாத பகுதிகளிலும் செயலியை பயன்படுத்த இந்த வசதி பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த செயலியில் ஆஃப்லைன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஆஃப்லைன் மோட் பயன்படுத்தும் போது ஏற்கனவே டவுன்லோடு செய்யப்பட்ட ஃபீட்களுக்கு கமெண்ட், லைக் மற்றும் போஸ்ட்களை சேவ் செய்து கொள்ள முடியும். மேலும் பயனாளிகளை அன்ஃபாலோவும் செய்ய முடியும் என இன்ஸ்டாகிராம் பொறியாளர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

Related Topics:Online Tamil News