பலாத்காரத்தில் தப்பிக்க..! காமுகர்களுக்கு வித்தியாசமாக பாடம் புகட்டிய மாணவி…!!

பலாத்காரத்தில் தப்பிக்க..! காமுகர்களுக்கு வித்தியாசமாக பாடம் புகட்டிய மாணவி…!!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவி நோவா ஜான்ஸ்மா. இவர் வெளியில் நடந்து நடந்து செல்லும்போது காமுகர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளார்.

இதனை தடுக்க என்ன செய்வது என யோசித்து உள்ளார். அப்போது அவருக்கு புதிய ஐடியா ஒன்று தோன்றி உள்ளது.

அதன்படி அவர் சாலையில் நடந்து செல்லும்போது தன்னை பாலியல் ரீதியாக சீண்டி பார்ப்போரிடம் ஒரு செல்பி எடுத்து கொள்ளலாமா என்று கேட்கிறார். அவர்களும் என்ன ஏது என்று தெரியாமலேய ஒப்பு கொள்கிறார்கள்.

பின்னர் அவர்களிடம் இருந்து ஒருவழியாக சமாளித்து சென்றபின்னர் அந்த செல்பி போட்டோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி விடுகிறார்.

மேலும் இவர் என்னை பாலியல் ரீதியாக சீண்டியவர் என்று ஸ்டேட்டஸ் போட்டு விடுகிறார்.

இதனால் அவரை இப்போது யாரும் சீண்டுவது கிடையாதாம். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, ஆண்களை அவமானப்படுத்துவது என் நோக்கம் அல்ல. அந்தரங்கம் என்பது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட விஷயம்.

அதில் மற்றவர் தலையிட கூடாது என்பதை விளக்கவும், விழிப்புணவர்வு ஏற்படுத்தவும் இதுபோன்று செய்தேன் என்கிறார். நல்ல யோசனையா இருக்கே என மற்றவர்களும் பின் வருகிறார்கள்.

Related Topics: Don’t Miss