சசிகலா நீக்கமும் கிடையாது..! பன்னீர் முதல்வரும் கிடையாதாம்..! ஆட்சியே போனாலும் பரவாயில்லையாம்..!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் பரபரப்புக்கு குறைவில்லை. அதுவும் அதிமுகவில் தினமும் பரபரப்புதான்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றினார். அதோடு நிற்காமல் முதல்வராக வேண்டும் என்றும் காய் நகர்த்தினார்.

இதனால் தனக்கு பதவி பறிபோய்விடுமோ என்று பயந்த பன்னீர் செல்வம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது.

அதிமுகவில் இனி ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக்கூடாது. நான் தர்மயுத்தம் தொடங்குகிறேன் என்றார்.

இவ்வாறு இரு அணிகளாக பிளவு பட்ட அதிமுகவில் மீண்டும் இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் இன்று கட்சியில் இருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் போன்ற கடும் நிபந்தனைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை  தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அம்மா அணியில் உள்ள அன்வர் ராஜா எம்.பி  கூறியதாவது :

பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது புதிய முதலமைச்சர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

இந்த மன நிலையில்தான் எடப்பாடி அணியினர் உள்ளனர். இதனைக்கால தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர் பன்னீர் செல்வம் அணியினர் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Topics : Enna kodumai sir idu