தினகரனை பார்க்காமல் விரட்டியடித்த சசிகலா..! பெங்களூரில் காத்து நிற்கும் அவலம்..!?

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவார் என்று நம்பி தனது அக்கா மகன் தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார்.  அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன்.

நடராஜன், திவாகரன் மற்றும் உறவினர்களை ஒதுக்கிவைத்து, உறவினர்களிடையே விரோதத்தை வளர்த்தது, சசி சொல்லியும் கேட்காமல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராக நின்றது, இரட்டை இலை சின்னத்தை பறி கொடுத்தது, ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா செய்தது,

ஆதாரங்களோடு சிக்கி தேர்தல் ரத்தாக காரணமாக இருந்து, விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனை என பல விவகாரங்களில் தினகரன் மீது சசிகலா கோபமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரம் பேசியதாக தற்போது அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், நாளை சென்னை வரும் டெல்லி போலீசார் இதுபற்றி தினகரனிடம் விசாரணை செய்ய உள்ளனர். அப்போது தினகரனை கைது செய்து திஹார் சிறையில் கூட அடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் தினகரன்.

ஆனால், அவர் மீது கோபத்திலிருக்கும் சசிகலா அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும், இதனால் பெங்களூரில் விடுதியில் அறை எடுத்து தினகரன் தங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய உளவுத்துறை போலீஸ் தினகரன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தினகரன் தங்கியிருக்கும் பெங்களூரு ஹோட்டலிலேயே நாளை கைதும் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

உன்னை நம்பி கட்சியையும், ஆட்சியையும் கையில் கொடுத்து வந்தேன், அதை இழக்க வைத்துவிட்டாய் என்று சசி சிறையில் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

Related Topics : Enna kodumai sir idu