6 பவுன் செயினை கூழாங்கல்லாக மாற்றி அசத்திய சாமியார். இப்படியும் செய்யலாமா..?

சென்னையைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவர் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இவர் தனது தன் நிலைமையை ராஜி என்பவரிடம் கூறியுள்ளார்.

அவர் உடம்பில் துஷ்ட சக்திகள் இருக்கின்றன, அதை வெளியேற்ற வேண்டுமென்றால், சாமியார் ஒருவரை அணுக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நாகம்மாள் அதற்கு ஒப்புக்கொண்டு மாந்திரீகம் செய்யும் சாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சாமியார் நாகம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை ஒரு பாத்திரத்தில் போடும்படி கூறியுள்ளார்.

அதை வைத்து பூஜை நடத்தியதோடு, வீடு முழுக்க புகையை போட்டுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரத்தை திறந்து பார்க்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்காரணமாக நாகம்மாள் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரத்தை திறந்து பார்க்காமல் இருந்துள்ளார். 7 மாதத்திற்கு பிறகு உடல்நிலை சரியானவுடன் பாத்திரத்தை திறந்து பார்த்துள்ளார்.

அதில் தங்க நகைக்கு பதில் கூழாங்கல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகம்மாள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் அந்த சாமியாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Topics : Enna kodumai sir idu