ஜெ. இறப்பு விசாரணை நடத்தி, சசியை கைது செய்யவேண்டும்! பன்னீரின் முதல் கோரிக்கை!

அதிமுக பிளவுபட, சசி அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகள் உருவாகின. சில தினங்களுக்கு முன்னர், சசி அணி உடைந்து சின்னாபின்னமாகியது.

இதில் பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைய முடிவெடுத்து,  இணைவதற்கான கால நேரங்களை பார்த்து வருகின்றனர்.

எடப்பாடி அணியில் இருப்பவர்கள் ஒட்டு மொத்தமாக சசி குடும்பத்தினரை முழுமையாக கட்சி மற்றும் ஆட்சியில் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிச்சாமி அணியினரும்  அமர்ந்து பேசி, கட்சி பொறுப்பு, ஆட்சி நிர்வாகம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்போது எல்லாம் சிக்கல் வந்ததோ அப்போது எல்லாம் பன்னீர் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். ஆகவே சீனியாரிட்டி படி முதல்வர் பதவியை வழங்க வேண்டும்.

முதல்வர் பதவியை தர முடியவில்லை என்றால், துணை முதல்வர் பதவியாவது வழங்க வேண்டுமாம். அமைச்சரவையில் நிதி மற்றும் பொதுப்பணித்துறையும் வழங்கப்பட வேண்டுமாம்.

பொதுச் செயலாளார் பதவி அவசியம் பன்னீர் செல்வதுக்கு தரவேண்டும், அவைத்தலைவர் பதவி மதுசூதனனுக்கு வழங்க வேண்டும்.

புதிய ஆட்சி அமைந்தவுடன், ஜெயலலிதா இறப்பு குறித்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

அந்த விசாரணை வளையத்தில் ஜெயாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களையும் கொண்டு வரவேண்டும்.

விசாரணையில் சசி தவறு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஒருவர் அல்லது இருவரை தவிர அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கூடாது. முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு அமைச்சரவையில் இடம் தரவேண்டும்.

6 மாதங்களுக்கு பின்பு, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவெடுக்கலாம்.

ஜெயா வாழ்ந்த வீட்டை சசியிடம் இருந்து மீட்டு, அரசுடைமையாக்க வேண்டும். என்பது போன்ற அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கோரிக்கைகளுடன் பன்னீர் செல்வம் இருப்பதாக அவரது தரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Topics : Enna kodumai sir idu