அனல் பறக்குது ஆா்கே.நகரில்.. தினகரனுக்கு ஆதரவாக நடிகை எமிஜாக்சன் பிரச்சாரம்..?

ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர். இதனால் பெருசுகளிடம் நடிகை எமிஜாக்சனை பார்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,அம்மா  அணி சார்பில், தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு, தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் தருவது என, பல வழிகளில், வாக்காளர்களை கவர நினைக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு ஆதரவாக, சினிமா நட்சத்திரத்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்தில் பிறந்து, லண்டனில் மாடல் அழகியாக பணிபுரிந்த, நடிகை எமி ஜாக்சனை அழைத்து வந்து, தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய வைக்க திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து அதிமுக அம்மா அணியின் முக்கிய நிர்வாகி கூறியதாவது

மதராசபட்டணம் திரைப்படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அந்த படத்தில், அவர் ஆங்கிலேய பெண்மணியாக, தொப்பி அணிந்து நடித்திருப்பார்.

அந்த படத்தில், எமி அணிந்திருந்த தொப்பிகள், விதவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால், அந்த தொப்பிகள், மக்களிடையே மிகவும் பேசப்பட்டது.

அதை கருத்தில் கொண்டு, சிங்கப்பூரில் உள்ள, தினகரனின் நண்பர் மூலமாக, எமி ஜாக்சனை, பிரசாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இது நடக்குமோ நடக்காதோ, பொதுச் செயலாளா் படத்தைக்கூட விளம்பரத்தில் போடவில்லை.

இவருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய எமிஜாக்சன்தான் வேணுமா என்ன கொடுமை சார் இது.

Related Topics : Enna kodumai sir idu