அவர்கள் விரட்டி அடிக்கும் முன்பு, நீங்களே வெளிய வாங்க, கதறிய தினகரன் மனைவி!

கட்சி, ஆட்சியில் இருந்து தினகரன் சசிகலா ஆகியோரோடு, அவர்களது குடும்பத்தினரும் ஒதுங்க வேண்டும் என்று அமைச்சர்கள், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி முடிவெடுத்தனர்.

தகவல் அறிந்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவுமே வருத்தப்பட்டார்.

தினகரன் இல்லத்துக்கு, தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மட்டும் சென்றனர்.

இனியும் நாம் அமைதியாக இருக்க முடியாது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். இனிமேல் ஒரு நாள் கூட பழனிச்சாமி ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

தங்கத் தமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும்தான், பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று காரசாரமாக பேசியதாக தெரிகிறது.

பின்புதான், தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என, நள்ளிரவில் தினகரன் அறிவித்தார்.

தினகரன் மனைவி அனுராதா, இதெல்லாம் வேண்டாத வேலை என்று, கணவருக்கு ஆலோசனை சொன்னார்.

மனைவி சொல்லே மந்திரம் என்று நம்பும் தினகரன் தனது முடிவில் இருந்து பின்வாங்கினாராம். அமைச்சர்கள் விருப்பப்படி ஒதுங்கி கொள்கிறேன் என்று தினகரன் தெரிவித்தாராம்.

தற்போது கட்சியில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும், அனுராதா தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் விசாரித்தாராம்.

அதில் தினகரன் இந்த நிலைக்கு வரக் காரணமே தளவாய் சுந்தரம் தான் என்று அடுக்கடுக்காக புகார் வாசித்தனராம்.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவு கணவனிடம் அனுராதா பேசியுள்ளார். அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியுள்ளார்.

நேற்று வரை உங்களுடன் இருந்த அமைச்சர்கள், உங்களை கைவிட்டு, விட்டு, அப்படியே போய்விட்டனர். இந்த மண் குதிரைகளை நம்பியா, நீங்க மோசம் போகப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இனி நடப்பதை நான் சொல்கிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்த அவர் தினகரனிடம் கூறியதாவது,

அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் விருப்படி அதிமுக அரசியலில் இருந்து ஒதுங்கி விடுங்கள். இல்லை என்றால் அவர்கள் தொண்டர்களை திரட்டி, அடித்து விரட்டவும் செய்வார்கள். இந்த பெரிய அவமானம் நமக்கு தேவையா என்று கேட்டாராம்.

தமிழகம் முழுவதும் மன்னார்குடி கூட்டம் ஒரு மாபியா என்று பெயர் பெற்றுவிட்டது. இனியும் நமது குடும்பம் தலையிட்டால் பெரிய, பெரிய அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

இனி நீங்கள் போயஸ் கார்டன் பக்கம் மற்றும் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் பக்கம் செல்ல வேண்டாம்.

நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கே நீங்கள் பதவியில் இருப்பது பிடிக்கவில்லை. அப்ப யாரை நம்பி நீங்க அவர்களோடு மோத முடியும்.

அவர்கள் விரும்பியது போன்று செய்யட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்று அன்பாகவும், சற்று கோபமாகவும் கூறினாராம்.

இதனையடுத்து நடந்த சம்பவங்கள்தான். ஒதுங்கிக் கொள்வதாக தினகரன் அறிவித்தது என்று சசி அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ, அதிமுகவில் இருந்து சசி குடும்பம் விலகினாலே போதும் என்று அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Topics : Enna kodumai sir idu