உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்த சிறுவனின் போராட்டம்..! கல் நெஞ்சம் கொண்ட அரசின் மனம் இறங்காதா..?

சென்னையை அருகே உள்ள படூர் கிராமத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாரும் எதிர்ப்பாக்காத வகையில்  டாஸ்மாக் கடையை மூடக்கோரி கையில் பதாகையுடன் சாலையில் நின்று போராட்டம் நடத்தினான்.

தேசிய , மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்கு அப்பால் தான் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனால் 3200 டாஸ்மாக் கடைகள் தேசிய, மற்றும் மாநில நெடுஞ்சாலைப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

மூடப்பட்ட அத்தனைக்கடைக்களையும், குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகிலும் வைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அருகே போராடிய பெண்களை ஒரு ஏடிஎஸ்பி அடித்து துவைத்தது  அனைவருக்கும் தெரியும். இது எப்படி உலக தமிழர்களிடம் இருந்து கண்டனம் வந்ததோ அதேபோல் சென்னை படூர் பகுதியிலும் இதேபோல்  குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை  திறக்கப்பட்டது. மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், போலீசார் டாஸ்மாக்குக்கு எதிராக போராடியவர்களை தடியடி நடத்தி, அந்த  இடத்தில் இருந்து கலைத்தனர்.  டாஸ்மாக் கடையை திறக்க உதவி புரிந்து பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(வயது7)  என்கிற சிறுவன் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தனி ஒரு மனிதனாக போராட்டத்தில் குதித்தான்..

பள்ளி சீருடையில், தோளில் புத்தகப்பை, கையில் “ குடியை விடு படிக்கவிடு” என்ற பதாகையுடன் டாஸ்மாக் கடை முன் இருக்கும் சாலையில் அமர்ந்து போராட்டத் தொடங்கினான்.

இதைப்பார்த்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் போலீசுக்கும், சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து அந்த சிறுவன் ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் சிறுவனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சிறிது தூரம் சென்ற பின்,  மீண்டும் அந்த சிறுவன் சாலையின் நடுவில் அமர்ந்து, கொதிக்கும் வெயிலிலும், புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கி நூதன முறையில் போராட தொடங்கினான்..

இந்த தகவல் காட்டுத் தீப் போல பரவியது. பதற்றம் நிலவியது  மக்கள் கூடத் தொடங்கினர், ஊடகத்துறையினரும் குவியத் தொடங்கினர்.

இதனால், பதற்றமடைந்த தாசில்தார், போலீஸ் அதிகாரிகள், தனி ஒரு மனிதனாகவே போராடிய அந்த சிறுவனிடம் போராட்டத்தை கைவிடு,

டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவோம் என்று உறுதி அளித்தனர். பின்னர் சிறுவன் அங்கிருந்து  சென்றான்.

டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்களே அதிக அளவில் போராடி வந்த நிலையில், இந்த சிறுவனின் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இது சம்பவம் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. அந்த சிறுவனுக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Related Topics : Enna kodumai sir idu