ஒ.பி.எஸ்.தான் பலம் வாய்ந்த தலைவர்! தர்மயுத்தம் வென்றது!

அதிமுக என்கிற மிகப் பெரிய இயக்கத்தின்,  நிலையான தலைவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்பு ஜெயலலிதா.

இந்திய அரசியல் கட்சியில் பா.ஜ.க., காங்கிரசுக்கு அடுத்தப்படியாக, அதிக எம்பிக்களை வைத்துள்ள 3 வது பெரிய கட்சி அதிமுக என்கிற பெயரை பெற்று தந்தவர் ஜெயலலிதா.

கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்பு, அதிமுகவில் தினம், தினம் பரபரப்புதான்.

30 வருடங்களுக்கு மேலாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலா.

இவர்தான், கட்சியில் யார் இருக்க வேண்டும், யாருக்கு எந்த பதவி தரவேண்டும். யார், யார் அமைச்சர்களாக வரவேண்டும் என்று முடிவு செய்பவராக இருந்தார்.

முதல் சரிவு, சசிகலாவுக்கு நடந்தது அன்றுதான். ஆம்! ஜெயலலிதா இறக்கும் தருவாயில் யாரை முதல்வராக கொண்டு வருவது என்கிற கேள்விக்கு சசி நகர்த்திய காய், எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பா.ஜ.க பன்னீரை விரும்பியது. பின்னர் பன்னீர் முதல்வராக கொண்டு வரப்பட்டார்.

சசியின் தடையை தாண்டி ஒருவர், ஜெயலலிதாவிடம் பதவி பெற்றுவிட்டால், அந்த பதவியில் இருந்து தானாகவே ஓட வைப்பவர்தான் சசிகலா.

வரலாறு திரும்பியது. பதவிக்கும், கட்சிக்கும் பணம் பெற்றுக் கொண்டுதான் சசி மற்றும் அவரது குடும்பம் எதையும் யாருக்கும் செய்வார்கள்.

ஆனால் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் சசிகலா குடும்பம் தனது அதரவு எம்எல்ஏக்களுக்கு முதல் முறையாக பணம் செலவு செய்தது. அவர்கள் செலவு செய்த பணம் கூட கட்சி பணம் என்றுதான் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தனி ஆளாக சசிகலாவை விட்டு பிரிந்து வந்தார் ஒபிஎஸ்.பின்னர் அதிமுக தொண்டர்கள், மற்றும் எம்எல்ஏக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

பின்னர் கட்சியின் அவைத்தலைவர் வந்தார். அமைச்சர் வந்தார். பின்னர் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என வரிசையாக ஆதரவு தர தொடங்கினர்.

வெறும் 12 எம்எல்ஏக்களை வச்சுகிட்டு, சசிகலா பக்கம் 122 எம்.எல்.ஏக்கள் ஆட்சி, கட்சினு எல்லாம் இருந்தும் அவுங்க கண்ல விரல விட்டு ஆட்டி கட்சியையும் , ஆட்சியையும் தன் பக்கம் வர வச்சுட்டார்.

சசி குடும்பம் இல்லாத ஒரு அதிமுக அமையபோகிறது. அந்த அதிமுக தொண்டர்கள் விரும்பிய, எதிர்பார்த்த அதிமுகவாக இருக்கும். எங்களது தர்ம யுத்த்த்தின் முதல் வெற்றி இதுதான்.

எம்.ஜி.ஆர். விரும்பிய, அம்மா விரும்பிய ஆட்சியை தருவோம். எங்கள் தர்ம யுத்தம் தொடரும் என்றும் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள், தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய, பலம்வாய்ந்த ஆளுமைத்தலைவர் ஓபிஎஸ் தான். என்று பொதுமக்கள் மத்தியில் பேச வைத்துள்ளது.

Related Topics : Enna kodumai sir idu