பன்னீர் மே முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..?! 8 அமைச்சர்களுக்கு கல்தா..!? முட்டல் மோதல் துவக்கம்..!?

சண்டையில கிழியாத சட்டை எங்காவது உண்டா?  பிரச்னை இல்லாத அரசியல் கட்சிகள் உண்டா?

இரு அணிகள் இணைந்தாலும், சிலர் அந்த அணியில் உள்ளவர்களுக்கு அது கொடுக்கக்கூடாது. இந்த அணியில் இருந்து வந்தவர்களுக்கு இது கொடுக்கக் கூடாது என்று இப்போதே முட்டல் மோதல்கள் துவங்கியுள்ளது.

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைக்க மேற்கொண்ட முயற்சியில் திடீர் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

ஓ.பி.எஸ் அணியோடு எதிர்அணியை இணைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் அது பலருக்கு கடும் விஷமாக மாறியிருக்கிறது.

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், மந்திரிகள் டாக்டர் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.டி. ராஜேந்திரபாலாஜி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய்சுந்தரம், ராஜன் செல்லப்பா சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களான வெற்றிவேல், பாலகங்கா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.

அதேபோல் அவர்கள் மீதான அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

பிற மந்திரிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு எங்களால் எந்த சிக்கலும் இல்லை. டி.டி.வி. தினகரன் மட்டுமல்ல, எம். நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறவுகள் யாரும் கட்சி-ஆட்சிப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது.

முதல்வர் எடப்பாடி மற்றும் குற்றச்சாட்டு பட்டியலில் இல்லாத நபர்கள் பழையபடியே மந்திரியாக தொடரலாம்.

கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம், பொருளாளராக பி.ஹெச்.பாண்டியன், அவைத்தலைவராக எப்போதும் போல் இ.மதுசூதனன் பொறுப்புகளை ஏற்பார்கள்.

தலைமைக் கழக செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், கொ.ப.செ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உடனடி மாற்றம் செய்யப்படும்.

கே.பி.முனுசாமி, பொன்னையன், டாக்டர் மைத்ரேயன் மாஃபா. பாண்டியராஜன் தலைமை இதற்கான பணியை செய்து வருகிறது.

ஓ.பி.எஸ். அணியின் இந்த முடிவு, மூத்த அமைச்சர்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாகவே இதற்கான கலந்தாய்வு போய்க் கொண்டிருக்கிறது. பெருவாரியான ஆதரவாளர்களுடன் இவையனைத்தும் செயல்வடிவமாகி விடும். மே மாதத்தின் முதல்வாரத்தில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்’ என்று உறுதியாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் கூட பன்னீர் அணியினால் ஓரம் கட்டப்படும் தினகரன் ஆதரவாளர்கள், ஆட்சியை கலைக்க முடிவு செய்து எதிராக செயல்பட திட்டம் வகுத்து உள்ளதாகவும்,

அதனை முறியடிக்க இறுதியில் தினகரன் மற்றும் சசி குடும்பத்தை தவிர அனைவரையும் ஏற்கும் சூழ்நிலையே உருவாகும் என்று பன்னீர் அணி, இபிஎஸ் அணியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனென்றால், மிச்சம் உள்ள 4 வருடத்தை இனி பதவி இல்லாமல் கழிக்க முடியாத நிலையில் அனைத்து அமைச்சர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Topics : Enna kodumai sir idu