பன்னீருக்கு ஆப்பு அடித்த தினகரன்..! மீண்டும் யுத்தம் தொடங்கியது..!

தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் தனிக்கூட்டம் போட்ட நேரத்தில் 10 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனால் எடப்பாடியின் கணக்கில் இருந்த 122 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக குறைந்துவிட்டது. பெரும்பான்மைக்கு தேவை 116. இதனால் ஓபிஎஸ்சிடம் சரண்டர் ஆக வேண்டிய நிலை எடப்பாடிக்கு இருந்தது.

ஓபிஎஸ் வசம் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நேரத்தில்தான் டிடிவி தினகரன், ‘கட்சிக்கும் ஆட்சிக்கும் சிக்கல் வந்துவிடக்கூடாது. அப்படி ஆவதை நான் விரும்பவில்லை. நான்தானே ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றே கட்சியில் இருந்து நான் ஒதுங்கிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

எடப்பாடி ஆட்சி தொடர தினகரன் உதவுகிறார் என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது. இதனால் அவரது 10 எம்எல்ஏக்களும் இப்போது எடப்பாடிக்கே ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கின்றனர்.

இதனால் கூடுதல் எம்எல்ஏக்களுக்கான அவசியம் எடப்பாடிக்கு தேவைப்படவில்லை. இதற்கு முன் நம்மிடம்தான் வருவார்கள் என்ற மிதப்பில் ஓபிஎஸ் இருந்தாராம்.

முதல்வர், பொதுச்செயலாளர் கட்டாயம் எனக்குத்தான் வேண்டும் என கேட்கலாம் என்றெல்லாம் நினைத்திருந்தார்.

ஆனால் நிலைமை இப்படி மாறியவுடன், அவரிடம் இதுவரை இருந்த வீராப்பு சட்டென்று வடிந்துவிட்டது.

இந்தக் கணக்கில்தான் டிடிவி தினகரன் காயை நகர்த்தி வேலை செய்திருக்கிறார். அமைச்சர்கள் சில அச்சுறுத்தலுக்கு பயந்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் என தினகரன் பேசின விதத்தில் ஒரு பதட்டமில்லை? நிதானம் இருந்தது.

இது அதிமுக மத்தியில் தினகரன் மீது மதிப்பை அதிகப்படுத்தி இருப்பது நிஜம். நிதானமாய் காய் நகர்த்தி பன்னீருக்கு ஆப்பு வைத்து விட்டார் என்கிறார்கள்.

ஆனால் பன்னீர் அணியினரோ, வேறுவிதமாக சிந்திக்கின்றனர். பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்காமல் பேச்சுவார்த்தை என்பது நடக்காத காரியம் என்று கூறிவருகின்றனர்.

எது எப்படியோ இனி, தமிழக அமைச்சர்கள் வீட்டில் அதிரடி ரைடு நடக்கும். விரைவில் ஆட்சி கவிழும். இவ்வாறு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Topics : Enna kodumai sir idu