அரை வேக்காடு கோழியை சாப்பிடுவீர்களா? நிகழும் ஆபத்துகள்…! ஹெல்த் டிப்ஸ்..!

அரை வேக்காடு கோழியை சாப்பிடுவீர்களா? நிகழும் ஆபத்துகள்…! ஹெல்த் டிப்ஸ்..

கல்யாண வீடாக இருந்தாலும், எந்த விசேஷமாக இருந்தாலும் சிக்கன் இல்லாமல் ஒரு விருந்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். அந்தளவுக்கு சிக்கனை மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு விரும்புவார்கள்.

அப்படிப்பட்ட சிக்கனை அரை வேக்காடாக சாப்பிடும் பொழுது, ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கோழிக்கறியை விதவிதமாக சமைத்து சாப்பிடுவதில் மக்கள் கைதேர்ந்தவர்கள். கடைகளிலும் சிக்கனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிக்கனை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை, நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்றே கூறுகின்றனர்.

மாறாக அரை வேக்காடு நிலையில் அதாவது அரை குறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும்,
பக்கவாதம் நோய் ஏற்பட அதிக வாய்ப்பபு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா உருவாகிறது. அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது.

இது தீவிரம் அடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படும். இத்தகவலை அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு என்பவர் தெரிவித்துள்ளார்.

அதனால், சிக்கனை நன்கு வேக வைத்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.