பல் வலியால் அவதியா? சொத்தைப்பல் அதிகம் இருக்கிறதா? இதோ டிப்ஸ்..

பல் வலியால் அவதியா? சொத்தைப்பல் அதிகம் இருக்கிறதா? இதோ டிப்ஸ்..

சொத்தைப் பற்களின் பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிறு வயதில் அதிக இனிப்புகள் திண்பதினாலும் அல்லது பற்களை சரியாக பராமரிப்பதினாலும் நிறைய பற்கள் சொத்தையாக மாறி, ஒரே தொந்தரவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதுபோன்ற, நேரங்களில் பற்கள் இல்லாமல் இருந்தால் கூட என்னவென்று கூட சிந்தனைகள் வரும். அந்தளவுக்கு பல் வலியின் வேதனை இருக்கும்.

இந்நிலையில், பல் வலியை போக்குவதற்கும், பல் பிரச்சனையை போக்குவதற்குமான சில செய்திகளை தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியமான ஈறு பற்களை இறுக பற்றியிருக்கும். அடர் பிரவுன் மற்றும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஈறாகும். அதுவே செக்க சிவப்பாய் சிவந்திருந்தால் அந்த ஈறு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என அர்த்தம் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கிராம்பு பொடி – அரை ஸ்பூன்

செய்முறை வகுப்பு:

முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை நன்கு கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள்.

இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.

இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும். இதைத் தொடர்ந்து செய்தால், பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.