புகையாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் எச்சரிக்கை…! குறைந்தது எட்டு முறை…! ஆய்வில் அதிர்ச்சி

புகையாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் எச்சரிக்கை…! குறைந்தது எட்டு முறை…! ஆய்வில் அதிர்ச்சி

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது. புகைப்பிடிப்பவர்களின் பட்டியலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள் என்பதே வேதனையளிக்கக்கூடிய விஷயம்.

இதனால், ஹார்ட் அட்டாக் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதிலும், 50 வயதுக்குள்ளானவர்களுக்கு கிட்டத்தட்ட 8 முறை அல்லது அதற்கு மேலும் ஹார்ட் அட்டாக் தாக்கக்கூடிய வாய்ப்பிருக்கின்றதாம்.

புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அதனை சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு எதிரொலிக்கின்றது. புகைப்பிடிக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல்நலத்தில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புச்சத்து போன்ற தீங்குகள் ஏற்படுகின்றதாம்…

இதனுடைய, பாதிப்பு ஹார்ட்டை தான் தாக்குகின்றதாம். ஒரு முறை ஹார்ட் அட்டாக் வரும் பொழுது, அதற்கப்புறம் முறையான சிகிச்சை செய்யாவிட்டால், தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து கொண்டே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள்…