பவ்யமாக இருந்த பன்னீரை, பாயும் புலியாக்கிய போயஸ்கார்டன் : ஐயோ பாவங்க பன்னீர்!

சசிகலா செய்த தவறுகளில் பெரும் தவறு பவ்யமாக இருந்த பன்னீருக்கு கொடுத்த டார்ச்சர்களும் போயஸ் கார்டனில் நடந்த சித்திரவதைகளும் தான் என்கிற உண்மையை சசி தரப்பில் நேற்று வரை இருந்த சட்டமன்ற உறுப்பினர்களே லீக் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும் பன்னீரிடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்த தினத்தில் இறந்து போன மகாதேவன் செய்த காரியம்தான் பன்னீரை அம்மா சமாதிக்கு போய் உட்கார வைத்தது. திவாகரன் கேட்ட கேள்விகள் மானம் உள்ள யாராலும் தாங்கிக் கொள்ள முடியாதவை. இதோ அதற்கான பலனை சசிகலா தரப்பு அனுபவிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தையில் புதிய சமரச திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும், தவிர போயஸ் கார்டனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

அவரவர் சொந்த ஊர்களுக்குப் போய்க் கொள்ளட்டும்  என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி பழனிசாமி அணி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

நேற்றோடு முற்றிலும் ஒதுங்கிக் கொண்டார் தினகரன். பெரிய விஷயங்களில் தப்பிப்பவர்கள் சின்ன விஷயத்தில் சிக்கி சின்னாபின்னமாவார்கள் என்பதற்கு பன்னீர் எடுக்கும் விஸ்வரூபமே சாட்சியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமைபட்டுக்கொள்கிறார்களாம்.

Related Topics; Don’t miss