ஓடும் வேனில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள்.! பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.!!

ஓடும் வேனில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள்.! பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.!!

தெலுங்கான மாநிலம் ஹைதராபத்தில் வசித்து வந்தவர் உதே கலாவதி. பழைய துணிகளை விற்கும் இவருக்கு ஒரு குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் இவர் மீண்டும் கர்ப்பமடைந்து 7 மாத நிறைகர்பினியாக இருந்துள்ளார். இவர் வழக்கம் போல் ஹைதராபாத் அருகே உள்ள கோம்பள்ளியில் துணிகளை விற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பம் போது பேருந்தை தவறவிட்டுள்ளார்.

பிறகு அந்த வழியாக வந்த ஒரு வேனில் உதவி கேட்டு அதில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த வேனில் இருந்த கிளீனரும் டிரைவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்களிடம் இருந்து கலாவதி தப்பிக்க ஓடும் வேனில் இருந்து குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவரும் கிளினரும் கலாவதியின் குழந்தையை நடுரோட்டில் இறக்கி வீட்டு சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் டிரைவரையும் கிளினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Topics:Don’t Miss