முறையான உணவுக்கட்டுப்பாடு – நீண்ட வருடம் வாழ்ந்த 117 வயது பாட்டி..!

முறையான உணவுக்கட்டுப்பாடு – நீண்ட வருடம் வாழ்ந்த 117 வயது பாட்டி.

எந்த வயதிலும் உணவுக்கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. சிறியவர், பெரியவர் என்பது எல்லாம் இல்லை. உணவுக்கட்டுப்பாட்டை பேணுவதன் மூலம் நாம் இளமையாக இருக்க முடியும்.

இதற்கு, நல்ல உதாரணமாக திகழ்ந்தார் உலகின் அதிக வயதுடைய 117 வயதைச் சேர்ந்த எம்மா மோரானோ என்ற பாட்டி. இவர் கடந்த மாதம் காலமானார். இவர், அதிக ஆண்டுகள் வாழ்ந்தது பற்றி கிடைத்த தகவலில் முறையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் தினமும் இரண்டு பச்சை முட்டை சாப்பிடுவாராம். பிறகு, ஸ்வீட்டும் சாப்பிடுவாராம். இந்த உணவுகள் அவரை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க உதவியதாம்.

அதேப்போன்று, ஆப்பிள் ஜுஸ், வாழைப்பழம், திராட்சை மற்றும் பச்சை இறைச்சி போன்றவைகளும் சாப்பிடுவாராம். இந்த உணவுகளெல்லாம் நல்ல புரதச்சத்துள்ள உணவுகள். இது, மனிதனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுப்பதாக கூறப்படுகின்றது.

இந்த பாட்டி இத்தாலியில் 1899ம் ஆண்டு பிறந்துள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி தான் இவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருக்கு சகோதரிகள் இரண்டு பேர். இரண்டு பேருமே 100 வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.