காதலியை 3 நாட்கள் அடைத்து வைத்து, 5 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காமகொடூரன்..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கம்மம்பாடு கோபாலபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

குவாரியில், லாரி டிரைவராக கரீமுல்லா(30) என்பவரும் வேலை செய்தார். அந்த இளம்பெண்ணிடம் பாலிசாக பேசி வந்தார். ஒருகட்டத்தில் உன்னை காதலிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

இதை ஏற்க அந்த பெண் மறுத்துள்ளார். என்றாலும் தொடர்ந்து ஆசைவார்த்தை கூறி தனது காதலை தொடர்ந்து சொல்லி வந்தார்.

இந்நிலையில் கடந்த 14ம்தேதி கரீமுல்லா மீண்டும் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகள்  பேசி யாரும் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இளம்பெண்ணை ஏற்றி தனது நண்பர்கள் 4 பேருடன் கடத்திச்சென்றாராம். பின்னர் ஆட்டோவிலேயே 5பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தொடர்ந்து 3நாட்களாக இளம்பெண்ணை அவர்கள் 5பேரும் ஆட்டோ, பஸ் என மாற்றி மாற்றி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

விஜயவாடா அருகே வந்தபோது, இளம்பெண் தங்களை போலீசில் மாட்டி விடுவாரோ என பயந்த கரீமுல்லா மற்றும் அவரது நண்பர்கள் ஹேர்டையை இளம்பெண் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி கொல்ல முயன்றனர்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கடந்த 16ம்தேதி குண்டூர் மாவட்டம், தெனாலி அருகே யாரும் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதையடுத்து அந்த இளம்பெண் போன் மூலம் தனது உறவினர்களுக்கு தெரிவித்தார். அதன்பேரில், தெனாலி வந்த அவரது உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து கொண்டூரு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரீமுல்லா உட்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Topics : Don’t miss