சளி மற்றும் தொண்டை வலிகளை போக்க…! சுக்கு – மல்லி காபி பருகுங்கள்…!

சளி மற்றும் தொண்டை வலிகளை போக்க…! சுக்கு – மல்லி காபி பருகுங்கள்…

சளி மற்றும் தொண்டை வலிகளால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் எல்லலாம் இருக்கின்றது. சில  இயற்கை பொருட்களை கொண்டே சளி மற்றும் தொண்டை வலிகளை குணப்படுத்தி விடலாம்.

அதை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் தேவையான பொருட்கள் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

தனியா – 150 கிராம்,
சுக்கு – 50 கிராம்,
மிளகு – 10 கிராம்,
திப்பிலி – 10 கிராம்,
சித்தரத்தை – 10 கிராம்,
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு.

எவ்வாறு செய்வது? :

1. பனை வெல்லம் அல்லது கருப்பட்டி நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நல்ல பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

2. தேவையான போது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால் போதும்.

இதன்மூலம், மணமான மல்லி காபி ரெடியாகிவிடும்! இந்த காபியை நாம் குடித்தால் சளிமற்றும் தொண்டை வலிகள் குணமாகிவிடும். முயற்சி செய்து பாருங்கள். அதனுடைய பலனை உணர்வீர்கள்.