இணையத்தில் வெளியான 4 வயது சிறுமியின் ஆபாச வீடியோ..! உதவி கோரிய போலீஸ் தரப்பு.!!

இணையத்தில் வெளியான 4 வயது சிறுமியின் ஆபாச வீடியோ..! உதவி கோரிய போலீஸ் தரப்பு…!!

பிரபல ஆபாச இணையதள பக்கத்தில் 4 அல்லது 5 வயது மதிக்க சிறுமியின் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து ஜெர்மன் போலீசார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

இந்த வீடியோவானது கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் முதன் முதலாக வெளியானது.

இதனால் அந்த சிறுமி கடந்த ஆண்டுமுதல் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு வருகிறார் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த சிறுமியை அந்த கும்பலிடம் இருந்து சிறுமியை மீட்கும் வரை தேடுதல் வேட்டை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்..

சிறுமியை யார் பலாத்காரம் செய்தார்கள் என்பது பற்றிய விவரம் இன்னும் கிடைக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் உதவினால் பேருதவியாக இருக்கும் என போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பழுப்பு நிற கண்கள் கொண்டவர் . மேலும் ஜெர்மன் மொழி பேசுபவராகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டவராக இருப்பார்.

இவரை பற்றிய தகவல் தெரிய வரும் நபர்கள் உடனே போலீசாரை அணுகவும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Topics:Don’t Miss