நீங்கள் ஒரு டீச்சரா? அரக்கி ! தூக்கில் தொங்கிய 9வயது மாணவி! என்ன கொடுமை இது ?

ஒட்டன்சத்திரம்: ஆசிரியை கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தும்பிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகள் காளீஸ்வரி (9).

அரசு உதவி பெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளி ஆசிரியை ஹேமமாலினி, நேற்று முன்தினம் தனது 4 வயது மகனை பள்ளிக்கு அழைத்து வந்தார்.

‘வகுப்பறையில்  யாராவது சத்தம் போட்டால், அவர்களது தலையில் குட்டு’ என மாணவி காளீஸ்வரியிடம் கூறி விட்டு ஹேமமாலினி வெளியே சென்றுள்ளார்.

அப்போது ஹேமமாலினியின் மகன் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் காளீஸ்வரி, சிறுவனின் தலையில் குட்டு வைத்துள்ளார்.

அப்போது உள்ளே வந்த ஹேமமாலினி, ‘எனது மகனையே குட்டுகிறாயா’ எனக்கூறி காளீஸ்வரியை திட்டி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காளீஸ்வரி, மாலையில் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டன்சத்திரம் போலீசார், அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காளீஸ்வரியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள்  மாலை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, காளீஸ்வரியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார், ஆசிரியை ஹேமமாலினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நேற்று இரவு காளீஸ்வரியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Topics; Don’t miss