அமைச்சரால் நொந்துபோன.. நீச்சல் வீரர்கள்..!

தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநிலம் தழுவிய இறுதி நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்தது.

100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டருக்கான பந்தயங்கள நடந்தன. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 600 நீச்சல் வீரர்கள் வந்திருந்தனர்.

காலையில் 100 மீட்டருக்கான போட்டி நடந்து முடிந்தது. மதியம் 3 மணிக்கு மற்ற போட்டிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனை பார்வையிடவும் பரிசுகள் வழங்கவும் வருவதற்கு ஒப்புதல் தந்திருந்தார் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

காலையில் வரவில்லை. மதியம் 3 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் போட்டிகள் துவங்கவில்லை. மாலை 5 மணிக்குதான் அவா் வந்தார். .

இதன் பின்புதான் இறுதி போட்டிகள் நடந்தது. இதனால் நீச்சல் வீரர்களோ வெறுத்துப்போய் காத்துக்கிடந்தார்கள்.

நீச்சல் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்திருந்த நிலையில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விளையாட்டுத்துறை ஆணையம். இதனால் அமைச்சரையும், அரசு அதிகாரிகளையும் சபித்தப்படியே இருந்தனர் புலம்பினா்.

Related Topics : Don’t miss

 

LEAVE A REPLY