அதிமுக பொதுச் செயலாளராகிறார் ரஜினி..! அதிர்ச்சியில் உறைந்த கார்டன்..!!

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இயற்கை மீதும் செடிகள் மீதும் அளவில்லாத பிரியம் உண்டு.

போயஸ் கார்டன் வீட்டிலேயே கார்டன் உருவாக்கப்பட்டது. அதில் தினமும் ஜெயலலிதாவும் சசிகலாவும் நடைபயிற்சி செய்வா்.

சிறுதாவூர் பங்களாவுக்குச் செல்லும்போதும் அங்கேயும் நடைபயிற்சி மேற்கொள்வதுண்டு.

ஒருநாள் நடைபயிற்சி செய்தபோது ஜெயலலிதா, ஒரு மலர் குறித்து சசிகலாவிடம் கேட்டுள்ளார்.

அந்த மலரின் அழகு ஜெயலலிதாவை வெகுவாக கவர்ந்தது. அந்த மலர் குறித்த விவரமும் சசிகலாவுக்கும் தெரியவில்லை.

அடுத்து கார்டனில் உள்ள சிலரிடமும் அந்த கேள்வியை கேட்க அவர்களும் விழிபிதுங்கி உள்ளனர்.
இதையடுத்து ஜெயலலிதாவின் மலர் குறித்த ஐயத்தை விளக்க உடனடியாக அங்கு அழைக்கப்பட்டவர் ரஜினி.

இவர், நாகர்கோவில் தோவாளையைச் சேர்ந்தவர். வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதால் ஜெயலலிதாவின் மலர் சந்தேகத்தை ஆங்கிலத்திலேயே விளக்கி அசத்தினார்.

ரஜினிக்கு, தோட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது.

போயஸ் கார்டனுக்குள் சென்ற ரஜினி, ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான பூங்கொத்தை கொடுப்பது வழக்கம்.

அதுவே அவருக்கு ரஜினியைப் பிடித்து போய்விட்டது. ஜெயலலிதாவை விட சசிகலாவிடமும் ரஜினி, விசுவாசமாக இருந்துள்ளார்.

சசிகலாவுக்கு மிகவும் பிடித்தமானவரானார்  ரஜினி. இவரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

பொதுச் செயலாளராக பதவிக்கு சசிகலா வந்தபின்பு சந்தித்த அரசியல் தலைவர்கள், வி.வி.ஐ.பிக்கள், கட்சியினருக்கு வழியை ஏற்படுத்தியவர் ரஜினிதான்.

சசிகலா, ரஜினியை அதிகம் நம்பியதால் அவருக்கு இப்போது கார்டனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ரஜினியின் தயவைப் பெற கட்சியினர் பலரிடம் போட்டோ போட்டி நிலவுதாம்.

நாஞ்சில் சம்பத்தை கார்டனுக்கு அழைத்து வந்ததில் ரஜினிக்கு முக்கியப் பங்கு உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கார்டனுக்கு அழைத்து வந்ததிலும் ரஜினிதான் நிற்கிறார்.

சசிகலாவும் ரஜினியும் நீண்ட நேரம் பேசிக் கொள்வதாக கார்டன் தகவல்கள் வெளிவருகிறது.

அதில் அரசியல் பேச்சும் இடம் பெறுகிறது. கார்டனில் இருந்தபடியே அரசியல் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் ரஜினி வசம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி, சிபாரிசு செய்த சிலருக்கு எம்.எல்.ஏ சீட்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

ரஜினியின் கை ஓங்குவதை கார்டனில் உள்ள சிலர் விரும்பவில்லையாம்.

ரஜினி, சசிகலாவின் நட்பில் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. ரஜினியை கார்டனிலிருந்தும், சசிகலாவிடமிருந்தும் பிரிக்க சில வியூகங்களை ஒரு தரப்பு செய்து வருகிறதாம்.

அதிலிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி தரப்பு தப்பித்து வருகிறாராம்.

ரஜினியின் மீது புகார் பட்டியலை மன்னார்குடி தரப்பு சசிகலாவிடம் சமீபத்தில் கொடுத்ததாம்.

அதில் பால் கலப்பட ஊழலில் ரஜினியின் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் ரஜினி மீது சசிகலா தரப்பு நம்பிக்கை வைத்துள்ளதால் எந்த குற்றச்சாட்டுக்களும் எடுபடவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புகிறார் ரஜினி.

தற்போது அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக முடிவெடுத்த சில அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு ரஜினியிடம் சசிகலா கொடுத்துள்ளாராம்.

இதுபோலதான் அன்று எம்ஜிஆா் சசிகலாவுக்கு ஜெயலலிதாவை கண்காணிக்கும் பணியை தந்தார். அது அதிமுகவையே கைப்பற்றும் அளவுக்கு சென்றது.

இப்போது ஜெயலலிதாவிடம் சசிகலா இருந்தது போல ரஜினி உள்ளார்.

எதிர்காலத்தில் ரஜினிக்கூட அதிமுக பொதுச் செயலாளராகும் வாய்ப்பும் கிடைக்கலாம் என்றம் கூறப்படுகிறது.

உளவு பார்க்க வந்த சசிகலா காட்சியை கைப்பற்றி நாட்டை ஆள முயற்சிக்கும் போது ரஜினியால் எதுவும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Topics : Don’t miss

 

LEAVE A REPLY