கிழிந்த சட்டையோடு நாடாளுமன்றத்திற்கு வந்த நிஜ மக்கள் முதல்வர்: கர்மவீரர்!

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.

உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , “இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்” என்றாராம் ,

வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.

இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். “.

“”மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்””
இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!

இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

 Related Topics; Don’t miss

1 COMMENT

  1. இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். அதற்கான தண்டனைதான் இப்பொழுது இருக்கும் அரசியல் வாதிகள்

LEAVE A REPLY