அதிமுக பேச்சாளா் மனோபாலா கைது..?! சசி மீது தொண்டா்கள் ஆவேசம்..!

இயக்குனர் மனோ பாலா அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருக்கிறார்.இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை யார் வழிநடத்தி செல்வது என்ற பிரச்சனை வந்த போது சசிகலாதான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

ஆனந்தராஜ் ,விந்தியா , நாஞ்சில் சம்பத் போன்றோர் எதிர்த்தனர் பேட்டி அளித்து விலகி நின்றனர்.

ஆனால் நாஞ்சில் சம்பத் பின்னர் மேலிடம் அழைத்ததன் பேரில் இணைந்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் , இயக்குனரும் , நடிகர் சங்க நிர்வாகியுமான மனோபாலா தனது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா , முதல்வர் ஓபிஎஸ் பற்றிய சர்ச்சைக்குரிய கிண்டல் வாசகத்தை பதிவு செய்துள்ளார்.

இது பற்றி அதிமுக பிரமுகரும் நடிகருமான ஆலந்தூர் சினி.சரவணன் இது குறித்து போயஸ் கார்டன் , அதிமுக தலைமை நிலையம், ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு ஒரு நல்ல தலைவரை இழந்து ஆழ்ந்த சோகத்தில் தத்தளிக்கிறது! தமிழக மக்களும் எங்கள் அஇஅதிமுக விசுவாசிகளும் செய்வதறியாமல் தடுமாறுகிறார்கள்! தவிக்கிறார்கள்!

இந்த சோதனையான தருணத்தில் அனைவராலும் விருப்பு வெறுப்பின்றி ஏற்கும் தலைமையாக தொடர்வதற்கு தொண்டர்களிடமும் தமிழக மக்களிடமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

நமது தமிழக அரசும் அஇஅதிமுக தலைமையும் இந்த சமயத்தில் நமது கழகத்தின் அஇஅதிமுக நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட நடிகருமான மனோ பாலா அவர்கள்

தமிழக முதல்வர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் இரண்டு கோடி தொண்டர்களை அடங்கிய அஇஅதிமுக வின் பொது செயலளார் சின்னமா அவர்களையும்

சினிமா நடிகர்களின் WhatsApp குரூப்பில் கேலி கிண்டல் செய்து தவறான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்!

இது ஒரு தனி மனித குற்றமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் எதிரான குற்றமாகும்!

இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்! மனோபாலா மீது நாளை காலை சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் சார்பாக புகார் கொடுக்கப்படும் !

இதனை தொடர்ந்து அஇஅதிமுக தலைமை கழகத்திலும் போயஸ் கார்டனிலும் புகார் மனு கொடுக்கப்படும் !

வீழ்ந்தாலும் எழுந்தாலும் அதிமுக – மட்டுமே !அம்மா மீது சத்தியம் என்றார் சினி சரவணன் .

இதில் மனோபாலா மீது நடவடிக்கை பாயந்தால் அது அதிமுகவில் எதிர்ப்பு அலையை உண்டாக்கிவிடும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் பல இன்னல்களுக்கு மனோபாலா ஆளாக நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

Related Topics : Don’t miss

 

LEAVE A REPLY