தீபாவுக்கு இனி தீபாவளிதான்..! அதிர் வேட்டு சத்தத்தில் நடுங்கும் சசி..!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர் சசிகலா புஷ்பா எம்.பி.

சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அ.தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா.

தி.மு.க எம்.பி, சிவாவை கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டினார் சசிகலா புஷ்பா எம்.பி, .

தற்போது அவர் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தென்மாவட்டங்களில் கோலோச்சியவர்களில் ஒருவர் மணல் மனிதர் என்று அழைக்கப்படும் வைகுண்டராஜன்.

இவரை ஜெயலலிதா, சில காரணங்களுக்காக கட்சியிலிருந்து ஓரங்கட்டினார்.

இவர் மூலமாகவே கட்சிக்குள் நுழைந்தவர் சசிகலா புஷ்பா. தற்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகவே வைகுண்ட ராஜனின் செயல்பாடுகள் உள்ளது.

ஜெயலலிதா, மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக் கூடாது என்று சசிகலா கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

இதனால் பொதுச் செயலாளரானதும் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் பங்கேற்க பலருக்கு விருப்பம் இல்லை. கட்டாயப்படுத்தியே நிர்வாகிகளை மாவட்ட அளவில் பொறுப்பிலிருப்பவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்திலேயே சசிகலாவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பலைகள் இருந்தன.

ஜெயலலிதாவுக்குப் பயந்தவர்கள் சசிகலாவுக்கு பயப்பட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.

சசிகலாவின் தலைமையை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஒரு தரப்பு அ.தி.மு.க.வினர் முன்னிறுத்தி வருகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள சசிகலா புஷ்பா எம்.பி திட்டமிட்டு அதற்கான காயை நகர்த்தி வருகிறார்.

சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் எல்லோரும் ஒரே அணியில் சேர்ந்து அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த உள்ளோம்.

தென்மாவட்டங்களில் வைகுண்ட ராஜன் மூலம் அ.தி.மு.க.வுக்குள் நுழைந்தவர்கள் இன்னும் அவருக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் ஆதரவாகவே இருக்கின்றனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு சசிகலா அழைத்தும் அவரது ஆதரவாளர்கள் செல்லவில்லை.

பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன், அமைச்சர் சண்முகநாதனுடன் அதிக நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், உடன்குடி மகேந்திரன் ஆகியோர் செல்லவில்லை.

இதில் சுப்பிரமணியன், மகேந்திரன் ஆகியோர் தீபாவுக்கு ஆதரவு என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர்.

குமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக ஏற்கெனவே ஒரு அணி செயல்படுகிறது.

அந்த அணியில் இருப்பவர்களை சசிகலா புஷ்பா தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி தீபா அணியில் சேர வழிவகை செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த மகேந்திரன்  தீபா பேரவையை தொடங்கி உள்ளார்.

“தீபா பேரவை பல இடங்களில் தொடங்கப்பட்டு வரும் நேரத்தில் அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தயாராக இருக்கின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் உறவினர் தீபாவின் ஆதரவாளராக உள்ளார்.அவர், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தென்மாவட்டங்கள் மட்டுமல்ல கொங்கு மண்டலத்திலும் தீபாவை ஆதரிக்கும் குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு

அவா்களுக்கு கல்தா கொடுக்கவும் ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

தீபாவுக்கு இனி தீபாவளிதான். சசிகலாவின் எதிர்ப்பாளா்கள் வைக்கு வேட்டு சத்தத்தில் சசிகலா கதி கலங்கி போய்யுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Topics : Don’t miss

LEAVE A REPLY