“ரஜினி படம் இப்போ ரிலீஸ் ஆகட்டும் -பிளாப் தான்” இதை யாரு சொல்லுறது தெரியுமா?

தமிழக அரசியல் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னரே ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கி கொண்டே உள்ளது. அதுவும் இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், அதிரடி திருப்பங்களை தமிழக அரசியலில் கொண்டு வந்து செய்தி சேனல்களுக்கு தீனியை போட்டு வருகிறது.

தமிழக அரசியலில், இது போல ஒரு பஞ்சமில்லாத பரபரப்பு, எம்.ஜி.ஆர் இறப்புக்கு பின் தான் எழுந்தது. இப்போ மீண்டும் அப்படி ஒரு சஸ்பென்ஸ், திருப்பங்கள் என்று அரசியல் காலம் சூடேறிக்கிடக்கிறது. செய்தி சேனல்கள் டிஆர்பி தான் எகிறுது.

கோலிவுட்டில் இயக்குனர்கள் கூடி பேசும்போது, “ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி மக்கள் சினிமா தியேட்டருக்கு வரலையோ, அது போலவே அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே உட்கார்ந்து தமிழக அரசியலில் ஏற்படும் அதிரடி பரபரப்பு காட்சிகளை பார்த்துட்டு இருக்காங்க. இப்போ படம் ஓடுவது கொஞ்சம் சிரமம்” என்று கருத்து பரிமாறுகின்றனர்.

இதே கருத்தை எழுத்தாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாவோ, அரசியலோ,என்னமோ போங்க, எல்லாமே நாடகமும் நடிப்புமாய் இருக்குன்னு சிட்டிசன்கள் தான் கவலையில் இருக்கு.
Related Topics:Cinema News