“ஓ மைகாட்! கமல் தீவிபத்தில் இழந்தது இவ்வளவா?”

வீடு மற்றும் அலுவலகமாக இயங்கும் கமலின் ஆழ்வேர்ப்பேட்டை வீட்டில் சமீபத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. கமல் மூன்றாவது மாடியில் அப்போது தூங்கிக்கொண்டு இருந்தார். ஏ.சி. மற்றும் பிரிட்ஜின் ஷார்ட் சர்கியூட்டால் தீப்பிடிக்க, ஒரே புகை மண்டலமாக வீடு ஆகியிருக்கிறது.

எப்படியோ மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எந்த சேதமும் இல்லாமல் தப்பினார் கமல். ஆனாலும், அவர் இந்த வீட்டில் எரிந்துபோன பொருட்களின் பாதிப்பை கூட தாங்கிவிடுவாராம். அவரின் லைப்ரரியில் இருந்த புத்தகங்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் எரிந்துபோய் விட்டதாம்.

“சில எழுத்தாள நண்பர்கள் கையெழுத்திட்டு கொடுத்த பெர்சனல் பிரதிகள் அவை. அதில் சில எழுத்தாளர்கள் மறைந்தும் போய்விட்டனர். அதுதான் பேரிழப்பு” என்று கமல் பகிர்ந்துள்ளார்.

இப்போது கமல் லீசுக்கு ஒரு வீட்டில் தங்கியுள்ளார். நீலாங்கரை வீட்டில் இருந்து ஆபிஸுக்கு வந்து போகும் நேரம் அதிகம் என்பதால், ஆழ்வார்பேட்டை வீட்டை புதுப்பித்து வீடு மற்றும் அலுவலகமாக மாற்றப்போகிறார்.

அத்தோடு பக்கத்திலேயே தன்னுடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் சூட்டை கொண்டு வரப்போகிறாராம்.
Related Topics:Cinema News