தானா சேர்ந்த கூட்டம் படம் எப்படி..! திரை விமர்சனம்…!!

தானா சேர்ந்த கூட்டம் படம் எப்படி..! திரை விமர்சனம்…!!

 

சூர்யாவின் தான் சேர்ந்த கூட்டம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சூரியா – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய படம் தான சேர்ந்த கூட்டம். நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, காமெடி நடிகர் செந்தில், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல்-26 படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் படம் இது. அப்படி இருந்தாலும் இயக்குனர் விக்னஸ்ஸ் சிவனின் டச்சில் செம்மையாக ஜொலித்துள்ளது.

கமல் ரசிகர் மன்றம் வைத்து வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு திறமையான இளைஞன் வாழ்க்கையில் சிபிஐ எக்ஸாம் எழுதுகிறார்.

அதில் வேண்டுமென்றே பெயில் ஆக்கப்படுகிறார். அந்த விரக்தியில் தானே ஒரு டீமை அமைத்து நிறைய இடத்தில் ரெய்டு போகிறார்.

யார் இப்படி செய்வது என கண்டுபிடிக்க அரசு ஒருவரை நியமிக்கிறது அவர் தான் கார்த்திக். இவருக்குள் நடக்கும் போர் தான் படத்தின் சுருக்கமான கதை. ரெய்டு போகும் போது செந்தில் செய்யும் காமெடிகள் எல்லாம் செம்ம சிரிப்பை தூண்டுகிறது. பல வருடங்களுக்கு பிறகு செந்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

பின்னணி இசையில் அனிருத் பின்னிவிட்டார். கதையின் செகண்ட் ஹீரோ பெங்கரவுண்ட் மியூசிக் தான்

ஆக்சன், வசனங்கள், என படம் முழுக்க பின்னி பெடல் எடுக்கிற சூரியா. ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன், செந்தில் ஹீரோயின் கீர்த்தி என அனைவரும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்துள்ளனர்.

மொத்தத்தில் இது சூர்யாவின் ஒன் மேன் ஷோ. இந்த படத்தின் மூலம் சூரியா தனது அயன் படத்தினை நினைவு படுத்துகிறார். அந்த அளவிற்கு செம்மையாக பெர்பாம் செய்துள்ளார்.

மொத்தத்தில் பார்க்க மறுக்க முடியாத ஒரு படமாககும். இந்த படத்தின் மூலம் சூரிய 100 கோடி கிளப்பில் இணைவார் எனலாம்.

Related Topics: Cinema News