கற்றுக்கொள்ளாமல் இருந்தால் சான்ஸ் கிடைக்காதாம்… என்னய்யா அநியாயமா இருக்கே?

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் தற்போது விஜய், சிவகார்த்திகேயன்,விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய்சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’ மற்றும் தெலுங்கு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

ஓய்வு நேரங்களில் தற்போது சமந்தா சிலம்பம் பயின்று வருகிறாராம். புதிய சவால்களை ஏற்று அதை நிறைவேற்றுவதில் தனக்கு ஒரு சிறந்த ஹாபி என்றும், சிலம்பத்தில் சிறந்த வல்லுனராக வேண்டும் எனவும், விரைவில் தான் சிலம்பத்தை முழுவதுமாக கற்று விடுவதாக ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

தற்போது அவர் நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் சிலம்பம் குறித்த காட்சி வருவதால், படத்தில் இயல்பான சிலம்ப காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சிலம்பம் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புதுப்புது விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது சமந்தாவின் வழக்கம். தற்போது, சிலம்பத்தில் கால் பதித்துள்ளார்.எல்லாம் சரி அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ள திருமணத்திற்கு பிறகு கணவரை அடிக்காமல் இருந்த சரி..

related topics:cinema news