சத்யராஜ் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை.. தமிழகத்தில் குவியும் ஆதரவு

பாகுபலி 2′ திரைப்படம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ‘பந்த்’துக்கு வாட்டாள் நாகராஜ் 2000 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் கர்நாடகாவில் எந்த திரையரங்குகளும் படத்தை வாங்க முன்வரவில்லை, இதனால் பாகுபலி படக்குழு அதிர்ச்சி அடைந்தது. படக்குழு கொடுத்த அழுத்தம் காரணமாக நடிகர் சத்யராஜ் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சத்யராஜ் கன்னட அமைப்புகளிடம் வருத்தம் கேட்டது தொடர்பாக வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னட அமைப்புகள் தமிழக பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர்.

தமிழர்களை தொடர்ந்து தாக்கிய சம்பவத்திற்கு இன்னும் வருத்தம் தெரிவிக்காமல் உள்ள நிலையில் சத்யராஜ்  வருத்தம் தெரிவிப்பதாக  வந்த செய்தி எங்களுக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
related topics:cinema news