சத்யராஜ், கன்னட அமைப்புகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க முடிவு? படம் வெளியிடும் முனைப்புகளில் படக்குழு தீவிரம்!

கர்நாடக மாநிலம் தமிழர்கள் பெங்களூருவில் அதிகம் வசிக்கிறார்கள். பெங்களூருவில் கன்னடப் படங்களை விட தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்கள் அதிகம் வெளியாகும்.

தமிழர்களை தங்களது விரோதிகளாக நினைக்கும் கன்னட அமைப்புகள் தற்போது ‘பாகுபலி 2’ படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரச்சனை செய்து வருகிறார்கள்.

காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மறுத்தால் கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியிட முடியாது என முன்னதாக கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


பாகுபலி 2′ திரைப்படம்  28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி ‘பந்த்’துக்கு வாட்டாள் நாகராஜ் 2000 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ராஜமெளலி கூறுகையில் இப்போது திடீரென இந்த விவகாரத்தை தோண்டி எடுப்பது சரியல்ல எனவும், சத்யராஜ் இந்தப் படத்தின் இயக்குநர் அல்ல.கதாநாயகனோ கதாசிரியரோ தயாரிப்பாளரோவும் அல்ல. அவர் வெறும் ஒரு துணை நடிகர் தான். அவர் இந்தப் படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்து முடித்துவிட்டார்.

படத்தைத் தடை செய்வதன் மூலம் சத்யராஜுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என ராஜமெளலி தெரிவித்து இருந்தார். ஆனால் கன்னட அமைப்புகள் உறுதியாக இருப்பதால் படக்குழு  நடிகர் சத்யராஜுக்கு ஆதரவாக இருப்பார்களா? அல்லது சத்யராஜை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து தங்களது படத்தை வெளியிடும் முனைப்புகளில் படக்குழுவினர் இறங்குவார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்..

related topics:cinema news