பாகுபலி விவகாரம், கன்னட அமைப்புகளிடம் வருத்தம் தெரிவித்தார், சத்யராஜ்!

காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மறுத்தால் கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியிட முடியாது என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாகுபலி 2′ திரைப்படம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி ‘பந்த்’துக்கு வாட்டாள் நாகராஜ் 2000 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ராஜமெளலி சத்யராஜ் இந்தப் படத்தின் இயக்குநர் அல்ல.கதாநாயகனோ கதாசிரியரோ தயாரிப்பாளரோவும் அல்ல. அவர் வெறும் ஒரு துணை நடிகர் தான். அவர் இந்தப் படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்து முடித்துவிட்டார். என தெரிவித்து இருந்தார்.

படத்தைத் தடை செய்ய கன்னட அமைப்புகள் உறுதியாக இருந்தால் படக்குழு நடிகர் சத்யராஜை  மன்னிப்பு கேட்க வைத்து தங்களது படத்தை வெளியிடும் முனைப்புகளில் படக்குழு இறங்கி வருவதாக லைவ்டே நேற்று  கூறியிருந்தது. இந்தநிலையில் நடிகர் சத்யராஜ் கன்னட அமைப்புகளிடம் வருத்தம் தெரிவித்தார். அதன் வீடியோ.. நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…

 

related topics:cinema news