நிஜ வாழ்க்கையிலும் ராஜ்கிரண் தான் உண்மையான ஹீரோ..! இதை எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க..!

விளம்பரங்களில் நடிகர்கள் விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, அர்ஜூன், சூர்யா, மாதவன் உள்ளிட்ட ஏராளமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் நடிகர் அஜித் விளம்பரத்தில் நடித்தாலும், மக்களுக்கு தீமை விளைவிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்தும் எந்த விளம்பரங்களில்   நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார் நடிகர் அஜித்.

சமீப காலமாக , நகை அடகு, சீட்டு கம்பெனி, வேலை சம்பளத்துடன் படிப்பு , நகைக்கடை, துணிக்கடை, சோப்பு, உள்ளாடை, சீனி,உப்பு என அனைத்துக்கும் விளம்பரம் வந்து விட்டது.  மோசடி விளம்பரத்தில் நடித்தாலும், நடிகர் நடிகைகளுக்கும் ஏழரை காத்திருக்கிறது. இப்படியொரு சட்டம் வந்த பின்பு அடக்க ஒடுக்கமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில நடிகர்கள்.

இப்ப நீ என்ன சொல்ல வர கண்ணுன்னு நீங்கள் கேட்குறிங்க..? மேட்டர் இருக்கு நடிகர் ராஜ்கிரண் எல்லா படத்திலும் வேஷ்டி கட்டிட்டு வருவார். அவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபல வேஸ்டி நிறுவனம் அவரை   விளம்பரத்திற்காக அழைத்தது. அவரும் மறுத்தார். இது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.


தற்போது பிரபல வேஸ்டி நிறுவனம் ஒன்று நீங்கள் 10 படத்தில் வாங்கும் சம்பளத்தை நாங்கள் உங்களுக்கு தருகிறோம். நீங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது சம்பளம் லட்சத்தில் கிடையாது. சுமார் ரூ.4 கோடி வரை கொடுப்பதாக அழைத்தும் நடிகர் ராஜ்கிரண் அதற்கு மறுத்துள்ளார். என்ன மக்களே நம்ப முடிகிறதா? இது தான் உண்மை..

இது குறித்து அவர் கூறுகையில் நான் ஏற்கனவே பல முறை தெரிவித்து விட்டேன். மீண்டும் கூறுகிறேன். இப்ப நான் கட்டியிருக்கிற வேஷ்டி 140 ரூபாய். இதன் அடக்க விலை வெறும் 50 ரூபாய் தான் இருக்கும். மார்க்கெட்டிங், லாபம், கமிஷன் என சேர்த்து சேர்த்து விற்கப்படுவதால் தான் இந்த ரேட். இதைவிட குறைந்த விலை வேஷ்டிகள் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்குது.

இதை ஏழை மக்கள் வாங்கி உடுத்துகிறார்கள். இப்ப நான் போய் அது மாதிரி விளம்பரங்களில் நடிக்கிறேன்னு வைங்க. என்னோட சம்பளம், டி.வி யில் அந்த விளம்பரத்தை ஒளிபரப்பும் செலவு எல்லாவற்றையும் சேர்த்து ஐம்பது ரூபாய் வேஷ்டியை 200 ரூபாய்க்கு விற்கிற நிலைமை வரும். அதுக்கு நான் உடந்தையா இருந்திடக் கூடாதில்லையா? அதனால்தான் நடிக்கல என்றார் ராஜ்கிரண்…

தன்னை வாழ வைக்கும் சமூகத்துக்கு துரோகம் செய்யும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் நேர்மையாக வாழும் நடிகர் ராஜ்கிரண் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோ தான் அவர்.. என்ன சொல்றீங்க..ஆமாவா..இல்லையா..?

realted topic: cinema news