தயார் நிலையில் பாகுபலி2 – முக்கிய காட்சிகள் கட்?

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் இருந்தது.பாகுபலியைக் கட்டப்பா கொன்றது ஏன் ?’ என்ற கேள்வியுடன் படம் முடிக்கப்பட்டது.

படத்தின் முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் சட்டென்று முடிந்ததாக விமர்சனம் எழுந்தது. பாகுபலி 2ம் பாகம் 6000 தியேட்டர்களில் தற்போது வெளியாக உள்ளது. ‘பாகுபலி 2’ படத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்சார் முடிவடைந்து ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக சென்சார் குழுவிடம் வழங்கப்பட்ட படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்ததாகவும், சென்சார் தரப்பில் சில காட்சிகளை நீக்கச் சொன்னதாகவும், சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு தற்போது படத்தின் நீளம் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டும் தான் வரும் எனவும்,

ஒரு சில முக்கிய காட்சிகளை சென்சார் போர்டு நீக்க கூறிய போது நாங்கள் புரிய வைத்து அதனை மீண்டும் இணைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

related Topic: cinema news