இப்படி ஒரு அமைச்சர் நம்நாட்டிற்கு கிடைப்பாரா?

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். படத்தை கெளரவ் நாராயணன் இயக்கி வருகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை, உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா நடிக்கும் காட்சிகள் ஓமன் நாட்டில் ஒரு வாரமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படக்குழுவினரை ஓமன் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மர்வான் யூசுப் திடீரென சந்தித்தார். ஒரு நாட்டின் அமைச்சர் படக்குழுவை தேடி வந்து சந்தித்ததால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை இயக்குனர் கெளரவ் நாராயணன் போட்டு காண்பித்தார்.

“எங்கள் நாட்டை மிகவும் அழகாக படம்பிடித்துள்ளீர்கள்” என பாராட்டியதோடு “எங்கள் நாட்டில் அழகான இடங்கள் இருக்கிறது. எங்கள் நாட்டுக்கு அடிக்கடி படப்பிடிப்பு நடத்த வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

படப்பிடிப்பு மூலம் எங்கள் நாட்டிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும், படக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்” என அன்போடு அழைத்தாக கெளரவ் நாராயணன் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் படம் எடுக்க நம்ம ஆள்கள் படுத்தும்பாடுகள் எல்லாருக்கும் நன்கு தெரியும், அவரிடம் அனுமதி, இவரிடம் அனுமதி, அவரை பாருங்கள்.. இவரை பாருங்கள் கேட்கவே தலை சுத்துதா இது நமது நாட்டின் நிலை… பின்ன எப்படி வருவாய் வரும்..

Related topic:cinema news