போக்கிரி குண்டு பையனின் தற்போதைய நிலை..! வளர்ந்து வாலிபானாகி…!!

போக்கிரி குண்டு பையனின் தற்போதைய நிலை..! வளர்ந்து வாலிபானாகி…!!

பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் அசத்தியவர் பரத். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் 50க்கும் மற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

இவர் சென்னையில் வேளாங்கன்னி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தவர். இங்கு படித்தபோதே பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம். இதனை பார்த்த ஏவிஎம் நிறுவனத்தினர் நைனா படத்தில் அறிமுகப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து வின்னர், போக்கிரி, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளிவந்த ரெட்டி பட வெற்றிக்கு பிறகு இவரை அனைவரும் பள்ளியில் சிட்டி ரெட்டி என்றே அழைப்பார்களாம். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக சில விருதுகளை வாங்கி உள்ளார்.

இவர் தற்போது வாலிப வயதை எட்டியுள்ள பரத், ஒல்லியாகி ஸ்லிம்மாகி உள்ளார். இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவுக்கு தம்பியாக நடித்தார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்குவேன் என்று கூறி உள்ளார்.

Related Topics: Cinema News