“சோட்டா பீம்’ மாதிரி இருந்துட்டு, நீங்க ‘பீமா?’ ஹாஹா!” மோகன்லாலை கலாய்த்த நடிகர்!

1000 கோடி ரூபாய், இந்திய மொழிகள் அனைத்திலும் உருவாக்கப்படும் படம். அதுவும் நம்ம கர்ண பரம்பரை கதையான மகாபாரதம். இந்த படம் பீமனின் பார்வையில் மகாபாரதத்தை வருணிக்கும் வாசுதேவ நாயர் நாவலை தழுவி எடுக்கப்படப்போகிறது.

பீமனாக மோகன்லால் நடிக்கப்போகிறார்.இதுதான் டாக் ஆப் தி டவுன். இந்த சூழலில், பாலிவுட் நடிகர் கமால் ஆர். கான் என்னும் கேஆர்கே , மோகன்லாலை ஒரு ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.

“நீங்க பார்க்க சோட்டா பீம் மாதிரி இருக்கீங்க? மகாபாரதாவில் நீங்க எப்படி பீமாக நடிப்பீங்க ? பி. ஆர். ஷெட்டி பணத்தை ஏன் வேஸ்ட் பண்றீங்க?”ன்னு கேட்கவும், எல்லா சேட்டன்களும் ட்வீட்டரையே நேற்று அசிங்க அசிங்கமா பேசி நாற அடிச்சிட்டாங்க.

கேஆர்கே எப்போதுமே ஏதாவது பேசுவார். நம்ம ரஜினிகாந்தையே பார்க்கவே சகிக்கலை, இவர் சூப்பர் ஸ்டாரான்னு கமெண்ட் பண்ணி, ரஜினி ரசிகர்களிடம் கேவலப்பட்டார்.

Related Topics:Cinema News