ஹீரோயின் நடித்த அனைத்து காட்சிகளையும் படத்தில் இருந்து தூக்கிய சுசீந்திரன்.. காரணம் என்ன தெரியுமா?

ஹீரோயின் நடித்த அனைத்து காட்சிகளையும் படத்தில் இருந்து தூக்கிய சுசீந்திரன்.. காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து ஹீரோயினின் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..

“படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நன்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.”

“நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என சுசீந்திரன் கூறியுள்ளார்.

Related Topics: Cinema News