“ஜி.வி.பிரகாஷ் ‘அம்மாஞ்சி’- ‘ரவுடி’ன்னு கெத்து காட்டுறாராம்…”

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகி நடிக்க, ரவிராசு இயக்கும் ஐங்கரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்போ நாமக்கல்லுக்கு மாறி இருக்கிறது. நாமக்கல்லில் இரண்டாவது செட்யூல் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த படத்தின் ஹீரோயின் மகிமா நம்பியார். சாட்டை படத்தில் அறிமுகம் ஆனாலும், குற்றம் 23 பெரிய பேர் தந்தது. அடுத்து அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


முதல் செட்யூலில் 40 சதவிகிதம் படம் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாவது செட்யூலில் மிச்சத்தை வேகமாக எடுத்து வருகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷுக்கு இப்போது ஒரு ஹிட் தேவைப்படும் நேரத்தில்,இயக்குனர் ரவிராசு ஈட்டி வெற்றி படத்தை தந்தவர். மெக்கானிக்கல் என்ஜினியராக ஜிவிபிரகாசை இயக்கி வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் அம்மாஞ்சி ரவுடின்னு இருவிதமான கேரக்டரில் இந்த படத்தில் கெத்து காட்டுறாராம்.

எப்படியோ, கெத்தாக இருந்தா சரி…

Related Topics:Cinema News