நடிகர் தனுஷ் கஸ்தூரிராஜா மகன் என்பதற்கு நீதிமன்றத்தில் என்ன சான்றிதழ் வழங்கினார் தெரியுமா?

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும்,அவர் 10ம் வகுப்பு வரை மேலூரில் தங்கள் பராமரிப்பில் படித்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்களுக்கு தெரியாமல் சென்னைக்குச் சென்றுவிட்டடார்.


அவரது உண்மையான பெயர் கலைச்செல்வன் எனவும் அவரது 10ம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சான்றுகளை மதுரை உயர் நீதிமன்றத்தில் கதிரேசன்–மீனாட்சி தம்பதியினர் வழங்கினர்.

நடிகர் தனுஷ் தரப்பில், கதிரேசன்–மீனாட்சி கூறும் தகவல் பொய் என கூறி, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஏப்ரல் 21ல் (இன்று) தீர்ப்பு வழங்கப்படுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தது.

முன்னதாக நடிகர் தனுஷ் அங்க அடையாளத்தை சரிபார்க்க நேரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பிரகாஷ் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

தனுஷ் தரப்பில் அவரது பிறப்புச்சான்றிதழ், சென்னையில் படித்த பள்ளி சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டது. கதிரேசன்–மீனாட்சி சார்பில் 10ம் வகுப்பு சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருந்த சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

தனுஷ் ஆவணங்களை ஏற்று நீதிபதி, கதிரேசன்–மீனாட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நினைத்தால் கதிரேசன்–மீனாட்சி தம்பதியினர்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.

related topic:cinema news