கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய இயக்குனர் கவுதம் மேனன்.! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய இயக்குனர் கவுதம் மேனன்.! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களை கொடுத்தவர் இயக்குனர் கவுதம் மேனன் .

இந்நிலையில் இவர் மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி திரும்பிகொண்டிருந்தார்.

அப்போது செம்மஞ்சேரி அருகே வந்த போது அவர் வந்த கார் டிப்பர் லாரியின் மீது மோதியது.

விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிவிட்டது. இந்த விபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics:Cinema News